108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்க்கு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் 1000 பக்தர்கள் தங்கும் வகையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தங்க அனுமதியளிக்கப்படவில்லை. குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்த வேளையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக யாத்ரி நிவாஸ் கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையமாக எடுத்துக் கொண்டனர்.

பின்னர், தற்போது வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்பட்டதையடுத்து இன்று (23.07.2021) யாத்திரி நிவாஸில் ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி முன்னிலையில், கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் தலைமையில் தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது.
இன்று முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்படுவார்கள் எனவும் , Srirangam.org என்ற இணையதளம் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் இணை ஆணையர் செ .மாரிமுத்து தெரிவித்தார்.