திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 156 பூரண குணமடைந்தனர்: ஆட்சியர் தகவல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 நபர்களும், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று வந்த 51 நபர்களும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் லேசான தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 85 நபர்கள் குணமடைந்துள்ளனர். ஆக மொத்தம் 156 நபர்கள் பூரண குணமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.