போக்குவரத்து விதியை மீறியதாக 2,600 பேர் மீது வழக்கு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சிக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 26ம் தேதி அதிகாலை முதல் நேற்று முன்தினம் அதிகாலை வரை திருச்சி மாநகர பகுதியில் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் அதிரடி சோதனை(ஸ்ட்ராமிங் ஆபரேஷன்) நடத்தப்பபட்டது. மாநகரில் உள்ள சோதனைசாவடிகள், லாட்ஜ்க்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளில் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் போக்குவரத்து விதிமீறியதாக 2,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விடுதிகள், ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி இருந்த 64 பேரிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எனவும் சரிபார்க்கப்பட்டது.