மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுஇந்நிலையில் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் 5 காவலர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் ஐந்து பேருக்கும் கொண்டு உறுதி செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். ஐந்து காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தகரகொட்டகையில் அமர வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வருகின்றனர். மேலும் காவல் நிலையம் வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வரிகிறது.இதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடதக்கது