திருச்சி மாநகராட்சியில் 201 கோடி செலவில் பழுதடைந்த பாதாளசாக்கடை பணிகள் – அமைச்சர் கே.என் நேரு
திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் ( Smart city) அபிவிருத்தி சார்ந்த பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் பழுதடைந்த குழாய்களை மறு சீரமைக்கும் பணிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.

இதில் நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் கே.என் நேரு…”பழுதடைந்த பாதளச்சாக்கடை பணிகளை சரி செய்யும் பணிகள் துவங்கி உள்ளது – 11 இடங்களில் இதனை சரி செய்தால் மொத்தம் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 65 இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவுபெறும், 201 கோடி செலவில் இந்த பணிகள் நடைபெறும். எந்த தாமதமும் இல்லமால் விரைவாக இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8