திருச்சியில் நாளை மின்விநியோகம் ரத்து!
திருவெறும்பூர் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை அன்று அவசர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர் துணை மின் நிலையம் மற்றும்
K.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 27.07.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.45 முதல் மாலை 4.00மணி வரை திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகள் திருவெறும்பூர் ,மலை கோவில் ,பிரகாஷ் நகர், வேங்கூர் ,டி நகர், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர் , திருவெறும்பூர் தொழில் பேட்டை , மேல குமரேசபுரம், சோழமாதேவி, சோழ மாநகர் நகர்,புது தெரு, நவல்பட்டு பர்மா காலனி ,நேரு நகர், அண்ணா நகர் போலீஸ் காலனி ,பூலாங்குடி, பாரதி நகர், 100 அடி ரோடு ,சூரியூர் கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்.ஐ.டி, குண்டூர் மற்றும்

K.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகள், K.K நகர் , இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர்,L.I.C காலனி, பழனி நகர்,முல்லை நகர், R.V.Sநகர், ஒயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், J.K. நகர், சந்தோஷ் நகர் ,ஆனந்த் நகர், கே சாத்தனூர் ஓலையூர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, காஜா நகர், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்