திருச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகளை அமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1271பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். என்றும் இல்லாத அளவாகநேற்று ஒரே நாளில் மட்டும் 16 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடமான காந்தி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டு மேலபுலிவார் ரோட்டில் கடந்த இரு தினங்களாக காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது.சிறு வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வந்து செல்கின்றனர்.இதனால் கொரோனா தொற்று உற்பத்தி செய்யும் மையமாக காய்கறி மார்க்கெட் மாறிவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே கடந்தாண்டு இருந்ததுபோல் தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மதுரை மைதானம் அண்ணா விளையாட்டு அரங்கம், காவிரி பாலம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக காய்கறி சில்லறை விற்பனை நடந்தது போல் தற்போதும் அதே போன்று மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.