திருச்சியில் 2வது டோஸ் தடுப்பூசி – நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 4 கோட்டங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு முகாம் ஒன்று செயல்பட்டு கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று திருச்சி நகரில் இரண்டு இடங்களில் மட்டும் கோவேக்சின் இரண்டாவது தவனை தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள தேவர் ஹால் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கத்தில் இதற்காக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 நாட்களுக்கு பின்னர் இன்று கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று செலுத்தி கொள்கின்றனர்.