கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பலர் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இரண்டு வருடங்களாக பள்ளிகளிலும் செயல்படாத நிலையில் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தர முடியாத சூழ்நிலையில் இன்றளவும் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி செல்ல முடியாத நிலைமையில், பாடம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்க கூட முடியாத சூழ்நிலையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சென்று மாணவர் ஒருவர் தன்னுடைய நிலைமையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவனிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அம்மாணவருக்கு நிச்சயம் உதவுவதாக எம்எல்ஏ தெரிவித்தார். இந்த நிலையில் இன்று புதிய ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கிய எம்எல்ஏ கதிரவன் அந்த மாணவனின் இல்லத்திற்கே சென்று கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் சிவசண்முககுமார் அந்த மாணவியின் இல்லத்திற்கு சென்று புதிய ஆண்ட்ராய்டு போனை கொடுத்து உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அக்குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA