திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி தேவராயநேரி பகுதியில் எஸ்.எஸ்.டோல்டவுன் சீப் குடியிருப்பு பகுதி உள்ளது. இதில் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்த முருகேசன் மகன் தியாகராஜன்(வயது 39). எஸ்.எஸ்.டோல் டவுன்ஷிப் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்ததும் வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று

உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அலுவலகத்தை திறக்க வந்து பார்த்த போது அலுவலக கதவு பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்திலிருந்து டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக தியாகராஜன் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.