மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்து.. வாலிபர் பலி

0 285
Stalin trichy visit

லால்குடி அருகே நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 28 வயதான வெற்றிவேல். கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மலர்மன்னன் மகன் 18 வயதான கரண், மூக்கன் ‌மகன் 17 வயதான முரளி் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கரண் ஓட்டி வந்துள்ளார். பின்னால் வெற்றிவேல், முரளி இரண்டுபேரும் அமர்ந்திருந்தனர். டோல்கேட் அருகே பழூர் என்ற இடத்தில் வந்தபோது பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது எதிரே சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் வெற்றிவேல் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்தின் ஓட்டுநர் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, நெய்தலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த 37 வயதான முத்துகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.