“சாரலும் தூறலும்” ஊட்டியாக மாறிய திருச்சி!

0 369
Stalin trichy visit

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 270 கி.மீ தூரத்தில் நீடிக்கிறது. 13 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றுழத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை 36 மணி நேரத்தில் நெருங்கும் என்றும், காற்றுழத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு

இருக்கிறது. தமிழகத்தில் மார்ச் 9-ம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், இன்று டெல்டா மாவட்டங்களில்

கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் திருச்சி மாநகர் முழுவதும் சாரலுடன் கூடிய தூறல் மழை பெய்து வருகிறது. ஊட்டி கொடைக்கானல் போன்ற காலநிலை திருச்சியில் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.