அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி!
திருச்சியில் பேராசிரியர் க.அன்பழகனின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,
மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார் பழனியாண்டி முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி பரணிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்துச்செல்வம் டோல்கேட் சுப்பிரமணி, கண்ணன், காஜாமலை விஜய், இளங்கோ, மோகன்தாஸ், வழக்கறிஞர்கள் கவியரசன், அந்தோணி, நாகராஜ், கமால், கார்த்திக், மாணிக்கம், எம்.ஆர்.எஸ்.குமார், எம்.பி. விஜய், அல்லூர் கருணாநிதி, கருத்து கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.