திருச்சி மன்னார்புரம் மின் செயற்பொறியாளர் முத்துராமன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர்
ஒரு பகுதி, மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஷ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், செந்தநீர்புரம், காட்டூர், திருநகர், நத்தமாடிபட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.