திருச்சி தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

0 306
Stalin trichy visit

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் நகரியம் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தில்லைநகர் பிரிவுக்குட்பட்ட தில்லைநகர் கிழக்கு பகுதிகளான தில்லைநகர் முதல் தெரு முதல் 7-வது தெரு வரை,

தில்லைநகர் கிழக்கு விஸ்தரிப்பு, சாஸ்திரிரோடு முதல் தெரு, கோட்டை ஸ்டேஷன் ரோடு, வாமடம், பாலக்கரை பிரிவுக்குட்பட்ட சின்னசாமிநகர், ஆழ்வார்தோப்பு, கே.எம்.நகர், ஸ்டீல்தோப்பு மற்றும் பீமநகர் ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய

புதிய மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.