சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு ஐ.ஜி. பாராட்டு!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்த சுமதி என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறியுள்ளார். பின்னர் அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு கடன் வழங்காமல் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சுமதி புகார்
கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் சம்பந்தபட்ட டெல்லியை சேர்ந்த சுனில்குமார் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் விரைவாக செயல்பட்டு சுனில்குமாரை காரைக்குடியில் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூர் சிறையில் அடைத்தனா். தனிப்படை போலீசாரின் சிறப்பான பணியை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.