கல்லூரி பேருந்து மோதி வங்கி பெண் ஊழியர் தலை நசுங்கி பலி!

0 775
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி பகுதியை சேர்ந்த ஆட்சிக்கண்ணு என்பவரது மனைவி 37 வயதான சுமதி. இவர் லால்குடி பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் கடன் வசூல் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுமதி சமயபுரம் பகுதியில் உள்ள வாடிக்கையாளரை சந்தித்து விட்டு் தனது ஸ்கூட்டரில் சென்னை- திருச்சி தேசிய

நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தனியார் மருத்துவ கல்லூரி பேருந்து சுமதி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சுமதி மீது கல்லூரி பேருந்து ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம்

குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்து சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.