மகளிரை கவுரவித்து இனிக்கோ இருதயராஜ் எம்.எல்.ஏ அசத்தல்!
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. எவ்வளவு உண்மையான வார்த்தைகள். மாதவம் செய்திடாமல் கிடைக்குமோ இப்படி ஒரு உன்னதமான பிறப்பு! எத்தனை எத்தனை பாகுபாடுகள், எத்தனை எத்தனை வேறுபாடுகள், பாலியல் வன்முறை, உரிமை பறிப்பு, சுதந்திர மறுப்பு, வறுமை, குடும்பச் சுமை, இப்படி பல இன்னல்கள் வாழ்க்கையில் தினம் தினம் வந்து சேர்ந்தாலும், இன்முகத்துடன் இவற்றை சமாளித்து சாதனை செய்கிறாள் பெண்!

பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் காய்கறி மற்றும் ஆட்டோ ஓட்டும் பெண்கள்
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் உழைக்கும் பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செய்ய திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.