கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் பணியில் ஈடுபட்டார் கவுன்சிலர் செந்தில்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று காலை முதல் தனது வார்டுக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் காமராஜர் தெரு, ராஜவீதி, பர்மா காலனி, குறிஞ்சி நகர், பிளோமினால் புரம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு தேவையான

அடிப்படை பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார். மேலும் 43-வது வார்டுக்குட்பட்ட மக்களுக்கு கட்டணமில்லா பிறப்பு சான்றிதழை ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர் செவிலியர்கள், பொதுமக்கள் முன்னிலையில் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.