திருச்சி மேலச்சிந்தாமணி, பள்ளிவாசல் அருகிலுள்ள மாநகராட்சி குப்பை தொட்டி அருகில், பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, மகாத்மாகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் 29.07.2021 அன்று அனுமதிக்கப்பட்ட குழந்தை, திருச்சி குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு மகிழன்ராஜ் என்று பெயரிடப்பட்டு, தற்காலிக வைப்பு ஆணை (TEMPORARY CUSTODY ORDER) மூலமாக, சேலம், லைப்லைன் டிரஸ்ட் – சிறப்பு தத்துவள மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இக்குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமைகோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புகொள்ளவேண்டியமுகவரி:
தலைவர், உறுப்பினர்கள்
குழந்தைகள் நலக்குழு,
கலையரங்கம் வளாகம்,
மெக்டொனால்டுரோடு,
கண்டோன்மெண்ட்,
திருச்சி-1
0431-2413819, 8608527589.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
கலையரங்கம் வளாகம்,
மெக்டொனால்டுரோடு,
கண்டோன்மெண்ட்,
திருச்சி-1
0431-2413055, 8220507101.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.