வேளாண் கல்லூரி மாணவிகளின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

0 235
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் மார்ச் 10 ந்தேதி வேளாண் கல்லூரி மாணவிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுடன் ஒன்றிணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம் தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்க்காக பல்வேறு களப்பணிகள் செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வேளாண்மைக் கல்லூரியின் மாணவிகள் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தை சேர்ந்த வேளாண் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவிகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுடன் ஒன்றிணைந்து மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் நெகிழி பொருட்களை தவிர்த்து துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.இதை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினர்.இந்நிகழ்வில் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.