திருச்சி மையப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!
திருச்சி பழைய பாஸ்போர்ட் ஆபிசின் அருகில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் மழைநீர் தேங்கி நின்றதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மெயில் இணையதள பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் அப்போது தண்ணீரை அகற்றி சென்றனர். ஆனால் அதற்கு நிரந்தர தீர்வு காணாமல் உள்ளதால்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் மீண்டும் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் டெங்கு பரவினால் மக்களால் சாமாளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்போம் என்பதற்கு ஏற்றார்போல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.