மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடில்லாத மின்கல வாகனம் அர்ப்பணிப்பு!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிக்காக 6 நபர்கள் பயணிக்கக் கூடிய சுற்றுச்சூழல் மாசுபாடில்லாத மின்கல வாகனத்தை பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுவின் தலைவர், திருச்சி-தஞ்சை திருமண்டலதின் பேராயர் டி.சந்திரசேகரன் அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர்

டி.பால்தயாபரன், துணை முதல்வர் பேராசிரியர் அழகப்பா மோசஸ், திருச்சி- தஞ்சை திருமண்டலதின் குருத்துவச் செயலர் எஸ்.சுதர்சன், இறைமக்கள் செயலர் ஸ்டேன்லி மதிச்செல்வன், சினாடு மாமன்றத்தின் துறை இயக்குனர்கள் கிறிஸ்டோபர் தர்மராஜ், மேக்ஸிம் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக்கப் புல முதன்மையர் ஆனந்த் கிதியோன் செய்தார். இவ்வாகனத்தை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சார்ந்த முன்னாள் மாணவர்களும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் முன்னாள் மாணவர்களும் கல்லூரிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.