திருச்சி பெட்டவாய்த்தலை கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் அப்பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். தனது காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். காலையில் பார்த்தபோது கார் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.