திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கூர்ஊராட்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் திருநங்கையான ராணி அம்மாள். மேலும் இவர் மும்பையிலிருந்து மதன்குமார் (வயது 18) என்பவரை சிறுகுழந்தை முதலிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் வேங்கூரில் உள்ள தனியார் பள்ளி ஆன செல்லம்மாள் உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் மதன்குமார் படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததால் அவரது தாயார் ராணி அம்மாள் அவரை திட்டியுள்ளார். மேலும் இதனால் மனம் வேதனை அடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்

தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மேலும் இதனை அறிந்த திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மதன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மதன்குமார் இறப்பதற்கு முன்பு சுயநினைவோடு அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக
கூறினர். அந்த கடிதத்தில் என்னால் எங்க அம்மா, அக்கா, எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எனக்காக இனி யாரும் கஷ்டப்பட வேண்டாம். அதனாலதான் இந்த முடிவு எடுத்துள்ளேன். எங்க அக்கா என் மேல ரொம்ப பாசம் வச்சு இருக்காங்க, எங்க அம்மாவும் தான். நான் நல்ல பையன் கிடையாது. அதனால இந்த மரணத்திற்கு யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். பிரேத பரிசோதனை
முடிந்த பின் இறுதி சடங்கிற்காக மதன் குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது. இதை கண்டு அவருடன் படித்த மாணவர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர். மேலும் அவர் பள்ளியில் சிறப்பாக நடனமாடுவார் என்றும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார் என்றும் அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க கூறினார்.