அரசு பஸ் மோதி அண்ணன், தம்பி படுகாயம்!

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் அடுத்துள்ள வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன்(வயது 51). லாரி டிரைவர். இவர் வெங்கடேசபுரத்திலிருந்து கலிங்கமுடையான் பட்டி செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் கதிரேசன் மற்றும் அவருடன் வந்த அவரது அண்ணன் கனகராஜ் (வயது 54) இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை

பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து ஏற்பட்டதால் அரசுப் பேருந்து சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்கியது இதில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.