ரயில் பெட்டியில் சீக்கிய குவார்ட்டர் பாட்டில்கள்!
வட மாநிலங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி செல்லபடுகிறதா? என ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காரைகாலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி ரெயில் நிலையம் வந்த போது ரெயில்வே போலீசார் மற்றும் குற்ற தடுப்பு துப்பறியும் பிரிவு போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் அந்த ரெயிலில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அந்த ரெயில் பெட்டி கழிவறைக்குள் ஒரு பை இருந்தது. அந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் சட்ட விரோதமாக 26 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்