கால் டாக்ஸியில் சென்ற பெண் மிஸ்ஸிங்!

0 387
Stalin trichy visit

திருச்சி நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகள் ஷெரின்குதா(வயது19). அய்மான் கல்லுாரியில் நியூட்ரீசன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது தந்தையிடம் பெண் தோழி ஒருவரின் திருமணத்திற்கு சென்று வருவதாக அனுமதி கேட்டுள்ளார்.

தந்தை இதற்கு சம்மதிக்கவே, அவரது வீட்டிற்கு வந்த மற்றொரு தோழியான ஆயிஷா என்பவருடன் சேர்ந்த கால் டாக்சி புக் செய்துள்ளார். வீட்டிற்கு வந்த கால் டாக்சியில் ஏறிச்சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் முகமது இஸ்மாயில் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.