வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு!

0 269
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனி அய்யனார் தெருவை சேர்ந்தவர் பாபு மகன் உசேன்(வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பனான ஆண்டனி ஜோசப் மகன் ரிஜிஆண்டனி(வயது 21)யுடன் பைக்கில் கடைத்தெரு சென்றுவிட்டு வீட்டிற்கு ரிஜிஆண்டனியை விடுவதற்காக, உசேன் பைக்கில் அழைத்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மணி மகன்கள் சோனி(என்கிற)விஜய குமார்(வயது 36), அவனது தம்பி அப்புனு(என்கிற)சந்திரசேகர்(வயது 30), அவர்களது

நண்பரான சேகர் மகன் ரஞ்சித்(வயது 28) ஆகிய 3 பேரும் சேர்ந்து உசேன் ஓட்டி சென்ற பைக்கை எட்டி உதைத்துள்ளனர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது ரிஜி ஆண்டனியை சந்திரசேகர், விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கல் மற்றும் கட்டையால் தாக்கி

உள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளனர். இச்சம்பவம் குறித்து உசேன், நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.