ஜன்னல் கம்பிகளை அறுத்து கடையில் திருட்டு!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மதுராபுரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துறையூர்-முசிறி ரவுண்டானா அருகே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்ற ராமகிருஷ்ணன், மறுநாள் காலையில் கடையை திறந்து பார்த்துள்ளார். அப்போது கடையின் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு, அதன் வழியே உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சுமார்
ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி ஒயர், லைனிங் வயர், 25 காயில், ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். துறையூரில் கடையின் ஜன்னல் கம்பியை அறுத்து, மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.