கவுன்சிலர் செந்தில் ஏற்பாட்டில் நடந்த அம்பாள் புறப்பாடு!
திருச்சி மாநகராட்சி 43வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் ந.செந்தில் நேற்று இரவு சமயபுரம் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தெற்கு காட்டூர் முருகன் கோயிலில் இருந்து அம்பாள் புறப்பாடு நிகழ்வை தொடங்கி வைத்தார். அப்போது

கவுன்சிலர் செந்திலுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கவுன்சிலர் செந்தில் செய்திருந்தார்.