திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி மேனகா தேவி(வயது 29). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கருத்தெரித்து இருந்த மேனகா தேவியிடம் சண்டை போட்ட
ரவிக்குமார் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில் ஆபத்தான நிலையில் இருந்த மேனகா தேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேனகா தேவியின் வயிற்றில்
இருந்த சிசு உயிர் இழந்தது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பொன்மலை காவல் நிலையத்தில் ரேணுகாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிக்குமாரை கைது செய்தி சிறையில் அடைத்தனர்.