மக்களுக்கு சேவையாற்றவே கவுன்சிலர் பதவி; கவுன்சிலர் ந.செந்தில் ஓப்பன் டாக்!

0 432
Stalin trichy visit

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தினமும் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக

இன்று காலை பர்மா காலனி, கமலா நேரு தெரு, முருகன் கோயில் தெரு, காட்டூர் மெயின் ரோடு, அண்ணா தெரு, போஸ் தெரு, பாரதியார் தெரு, ராஜவீதி, காந்தி சாலை, வ.உ.சி.தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கி நின்ற கழிவுநீரை அப்புறப்படுத்துவதுடன் கழிவுநீர் வாய்க்கால்களை துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்தார். தொடர்ந்து  அப்பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். இதுகுறித்து

கவுன்சிலர் செந்திலிடம் கேட்டபோது, என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். நான் வாக்கு சேகரிக்கும்போதே பொதுமக்களிடம் தங்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறுவேற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தேன் என்னை நம்பி எனக்கு இப்பகுதி மக்கள்

வாக்களித்து இந்த பதவியை வழங்கியுள்ளனர். எனவே தினமும் மக்களுக்காகவே சேவையாற்றி வருகிறேன். கவுன்சிலர் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்யும் பணி அதன்அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றேன். இப்போதும் செல்கிறேன் மக்கள் எப்போது வேண்டுமானாலும், என்னை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை வைக்கலாம். என்னால் முடிந்த உதவிகளை கட்டாயம் செய்வேன் என்றார்.  அப்போது கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.