கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்; பொதுமக்கள் மனு அளித்து பயன்!
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று
குறைந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக திங்கட்கிழமைதோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் வழங்கி பயன்அடைந்தனர்.