வெளிவீதிகளில் சாமி வீதிஉலா நடத்தக்கோரி சாலை மறியல்!

0 284
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப உற்சவ விழாவையொட்டி தினமும் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக மலைக்கோட்டை கோவிலின் உள்வீதி மற்றும் வெளிவீதிகளில் சாமி வீதி

உலா நடத்தப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக உள்வீதியில் மட்டும் வீதி உலா நடத்தப்பட்டு வந்துள்ளது. வெளிவீதியில் உள்ள சாலையை சீரமைத்து அங்கும் வீதிஉலா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் நேற்று இரவு சாமி வீதிஉலா புறப்பட்டபோது,

வெளிவீதியில் செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து பக்தர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.