18 முதல் 44 வயது வரையிலானவருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இன்று திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், மாநிலங்களவை உறுப்பினர் என்.சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.