திருவெறும்பூர் தொகுதி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி… “நீங்கள் எந்தவித தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி இட்டுக்கொள்ளும் போது அதே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்” என கூறினார்.

மேலும் கொரோனா தடுப்பூசி முகாமில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.தொடர்ந்து ஒன்றிய பொதுநிதி ரூபாய் 6 லட்சத்தில் இருந்து அமைக்கப்பட்ட தார்ச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன், கே.எஸ்.எம் கருணாநிதி, மாரியப்பன், நவல்பட்டு சண்முகம் கங்காதரன் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய..https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy