லால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் புதிய கொரோனா வார்டினை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.

0 215
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி ,புள்ளம்பாடி உள்ளிட்ட 78 ஊராட்களில் வசிக்கும் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெற லால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் வசதிகள் கொண்ட தனி வார்டினை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்..லால்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான 50 சிலிண்டர்களை டால்மியா சிமெண்ட் ஆலைத் தலைவர் விநாயகமூர்த்தி, பொது மேலாளர் சுப்பையா ஆகியோர் அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் மருத்துவமனை அதிகாரியிடம் வழங்கினார்கள். லால்குடி அரசு மருத்துமனைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ( ஜி பிளஸ் 3 ) மூன்றடுக்கு புதிய கட்டடங்களை விரைவில் கட்டப்படுமென அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார் இதனையடுத்து லால்குடி பேரூராட்சி பகுதியில் 7 வாகனங்களில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் கே .என். நேரு துவங்கி வைத்தார். உடன் லால்குடி தொகுதி எம்எல்ஏ செளந்திரபாண்டியன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.