திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் 793 வாகனங்கள் மூலம் காய்கனி- பழங்கள் விற்பனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 343
Stalin trichy visit

ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விநியோகம் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அந்த அடிப்படையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளுக்கும் தலா 5 வண்டிகள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் வீடு வீடாக சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று முதல் வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஊரடங்கானது காலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது காய்கறி மளிகை உள்ளிட்ட எவ்வித கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி ,பழங்கள் மாநகராட்சி மூலம் வாகனங்களில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகம் செய்ய வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி சீட்டை திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர்கள் வழங்கி வருகின்றனர்.அவ்வாறு அனுமதி சீட்டு இன்றி காய்கறி பழங்கள் விற்பனை செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல ஒரே இடத்தில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் காய்கறி, பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது, அவ்வாறு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சூழலில் தமிழக முதல்வர் உத்தரவுபடி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 793 வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, துவக்கி வைத்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.