அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

0 407
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பரிகார தெய்வங்களுக்கும் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை பூஜகர் சிவகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.