படிக்கும் வயதில் திருட்டு தேவையா? 3 பேர் கைது

0 295
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள சொரியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் பூட்டை உடைத்து செல்போன் கோபுரத்தில் உள்ள பேட்டரியை சிலர் திருடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் 3 பேரையும் பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்திய கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 3 பேரும் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வளசேரிபட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிருஷ்ணன்(28), வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார்(21) மற்றும் வெள்ளாளபட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.