ஒன்றிய அரசைக் கண்டித்து ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சியில் ஒப்பந்த பணிமுறையை கைவிடவேண்டும், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும், முன்களப்பணியாளர்களுக்கு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கவும், காலிபணியிடங்களை நிரப்பவும், வாரிசு பணிக்கு முன் உரிமை வழங்கவும், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத திட்டங்களை செயல்படுத்த துடிக்கும்தொழிலாளர் துறையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.