திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சித்திரப்பட்டி பள்ளிவாசல் வளாகத்தில் ரம்ஜானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு மற்றும் சமுதாய மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஹாஜி அப்துல் வகாப் தலைமை வகித்தார் ஜமாத் தலைவர் ஜனாப் அப்துல் கபூர், இமாம் மௌலவி ஹாபில் முகமது சாலிஹ் அல் ஜமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜனாப் முகமது அலி வரவேற்றார். இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ்மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிட்டப்பா, மதுராபுரி ஊராட்சி மன்ற தலைவர் ராமராஜ் துணைத் தலைவர் சேக் முகமது,ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ், வீரா என்கிற வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . மேலும் நிகழ்ச்சியில் நலிவடைந்த 20 இஸ்லாமிய குடும்பங்களும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக சித்திரப்பட்டி பள்ளிவாசல் சார்பில் அரிசி, மளிகை, ரொக்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் முகமது ஜீஹைர் நன்றி கூறினார்.