திருச்சி காட்டூர் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 52). இவர் அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகர் அருகே பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சம்பவத்தன்று கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பழைய இரும்பு 250 கிலோ, 131 இரும்பு உதிரி மற்றும் கல்லாவில் வைத்தி ருந்த ரூ.3,600 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து சர்புதீன் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், கீழஅம்பிகாபுரம் இந்திராநகரில் பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடை
வைத்து நடத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரின் குடோனில் 50 கிலோ இரும்பு ராடுகள் திரு டப்பட்டது. புகாரின் பேரில் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இனாம்குளத்தூர் அல்அமீன் நகரை சேர்ந்த முகமது அனீப் (என்கிற) ஹனீபா (19) என்ற வாலிபர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் ஹனீபாவை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.