சேறும், சகதியுமான சாலையை சீரமைப்பதாக கவுன்சிலர் எல்.ரெக்ஸ் உறுதி!
திருச்சி காட்டூர் 39வது வார்டு பாப்பாகுறிச்சி பாத்திமாபுரம், நாகப்பாசாமி கோயில் தெரு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதியின்றி மண் சாலையாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக

காணப்படுவதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அறிந்த 39வது வார்டு கவுன்சிலர் எல்.ரெக்ஸ் நேரில் பார்வையிட்டு விரைவில் சீரமைக்கப்படும் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்தார்.