சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது; கணவர் போக்சோவில் கைது!

0 385
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் புதுத்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜசேகர் (வயது 31). பெயிண்டர். இவருக்கும் இவரது உறவினர் மகளான அதே பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள 10ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கும் இடையே இருவீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இதனை அடுத்து சிறுமி கர்ப்பமடைந்தார். இதில் அவருக்கு கடந்த 3ம் தேதி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அழகான

 

ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தை அடுத்து மருத்துவமனை டாக்டர்கள் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 15 வயதே ஆவது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதை அடுத்து, கணவர் ராஜசேகர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.