தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை!

0 331
Stalin trichy visit

கோயம்புத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 46). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்

 

தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.