மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட விவசாயி படுகாயம்!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஒக்கரை விநாயகம் தெருவில் வசிப்பவர் கரிகாலன்(வயது 45). விவசாயி. இவருக்கு சந்திரா, சித்ரா என இரு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் குத்தகைக்கு பார்க்கும் தோட்டத்தில் அறுவடை செய்த நெல்மணிகளை எரகுடி அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்றுள்ளார். கொள்முதல் மையத்தில் நெல்மணிகளை சுத்தம் செய்யும் எந்திரத்தின் வயர்கள் குறுக்கே
கிடப்பது கண்டு, கையில் எடுத்து ஓரமாக வைக்க முற்படுகையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் விரல் மற்றும் மார்பில் பலத்த காயமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.