பி.ஜே.பி. மோடி அரசு பதவியேற்ற மே 26யை – இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக கடைப்பிடிக்க ஏ.ஐ.டி.யு.சி அழைப்பு

0 300
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் நடராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26.05.2014 அன்று பிஜேபி மோடி அரசு பதவியேற்ற நாள். இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக கடைபிடிப்பது என்றும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்கிற நிலையில் மோடி அரசின் தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்து அனைத்து மத்திய சங்கங்களும் கீழ்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் ஏஐடியுசி அதனைச் சார்ந்த சங்கங்கள் அலுவலகங்களிலும் வேலை நிமித்தம் தொழிலாளர்கள் கூடுகிற நிறுவனங்கள் முன்பும் தொழிலாளர் வசிக்கும் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி பதாகைகளை பிடித்தம் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்பு நாளை கடைபிடிக்க வேண்டுகிறோம்மத்திய அரசே!*இந்தியர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்*கொரோனாவால் வேலை இழந்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் தானியங்களோடு ஒரு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 7500 வழங்கு.*போராடும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்*கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வந்த தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய். இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக கூட்டுக*மின்சார சட்டத் திருத்தம், மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை ரத்து செய்திடு.*பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்திடுக.கொரோனோ கொடிய நோய் தீவிரமாக பரவும் நிலையில் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் வேலை இழந்து வறுமையில் வாடும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் சங்கங்களின் சார்பாகவும் முடிந்த உதவிகளை செய்யவேண்டும் என திருச்சி மாவட்ட ஏஐடியுசி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

Leave A Reply

Your email address will not be published.