திருச்சி கீழ முல்லைக்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் என்பவரின் மனைவி செல்வசுந்தரி(55). அண்ணா சிலை அருகே நின்று கொண்டிருந்தபோது அவரின் கவனத்தை திசை திருப்பி, இரு பெண்கள் அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் மனைவி சுலோக்சனா(29), சிரஞ்சீவி என்பவரின் மனைவி ரேகா(33) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த இரண்டு பெண்களும் மங்கள் அண்ட் மங்கள் நகை கடையில் நகை வாங்குவது போல நடித்து 5 பவுன் தங்க சங்கிலியை திருடியதும், பெரிய கடைவீதி பகுதியில் உள்ள அல்லிமால் தெருவை சேர்ந்த ஜமீலா(52) என்பவரிடம் நான்கே முக்கால் பவுன், புள்ளம்பாடியை சேர்ந்த கல்யாணி(48) என்பவரிடம் 5 பவுன், சமயபுரத்தை சேர்ந்த பிரேமா(59) என்பவரிடம் மூன்றே முக்கால் பவுன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 பவுன் நகைகளை பறிமுதல் செய்த கோட்டை குற்றப்பிரிவு போலீசார் இரு பெண்கள் மீதும் வழக்கு பதிந்து திருச்சி ஜே.எம். 1 நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.